Booking Office Franchise

Sulur

Coimbatore, Tamil Nadu
641402
Base Pincode
24/7
Backend Support

Financial Overview

Deposit Amount
₹30,000
Expected Income
15000
Commission Rate
15%
Rent & EB By
Company

Terms & Description

நாதன் லாஜிஸ்டிக்ஸ் - புக்கிங் ஆபீஸ் ஃபிரான்சைஸ்
முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறைகள்
எங்கள் நிறுவனத்தின் புக்கிங் ஆபீஸ் தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கான படிப்படியான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பகுதி 1: ஃபிரான்சைஸ் தொடங்கும் செயல்முறை
ஒரு புதிய கிளையைத் தொடங்குவதற்கு, பின்வரும் 6 படிநிலைகளை நிறைவு செய்ய வேண்டும்:
படி 1: இடம் மற்றும் விண்ணப்பம்
• முதலில் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பின்கோடு பட்டியலைச் சரிபார்க்கவும்.
• நாங்கள் அனுமதித்துள்ள குறிப்பிட்ட பின்கோடு பகுதிகளில் மட்டுமே புக்கிங் ஆபீஸ் அமைக்க முடியும்.
• உங்கள் பகுதி பட்டியலில் இருந்தால், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
படி 2: நேர்காணல்
• உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பிறகு, எங்கள் நிறுவனத்தின் அதிகாரி உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதற்கட்ட விபரங்களைப் பேசுவார்.
படி 3: நேரடி சந்திப்பு & வைப்புத்தொகை
• தொலைபேசி உரையாடல் திருப்திகரமாக இருப்பின், நீங்கள் நிறுவனத்திற்கு நேரில் அழைக்கப்படுவீர்கள்.
• நிறுவனத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ₹20,000 வைப்புத்தொகை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
படி 4: அலுவலக இடம் தேர்வு
• முன்பணம் செலுத்திய பிறகு, நீங்கள் அலுவலகத்திற்கான இடத்தைத் தேடலாம் (குறைந்தபட்சம் 200 சதுர அடி, தரை தளம் மற்றும் வாகனம் நிறுத்தும் வசதியுடன்).
• நீங்கள் தேர்வு செய்யும் இடத்தை எங்கள் நிறுவனக் குழு ஆய்வு செய்யும். நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகே அந்த இடத்தில் பணிகளைத் தொடங்க வேண்டும்.
படி 5: உள்கட்டமைப்பு மற்றும் அமைவு
• நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பெயிண்டிங், ஃபர்னிச்சர், போர்டு மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைகளை ஃபிரான்சைசி தங்கள் சொந்த செலவில் செய்து முடிக்க வேண்டும்.
• கணினி மற்றும் இதர சாதனங்களை ஃபிரான்சைசி வாங்க வேண்டும். (இதற்கான மொத்த பட்ஜெட் ₹85,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்).
படி 6: பயிற்சி மற்றும் துவக்கம்
• அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு, பில்லிங் மென்பொருள் மற்றும் செயல்முறைகள் குறித்த முழுமையான பயிற்சியை நிறுவனம் வழங்கும். பின்னர் உங்கள் கிளை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும்.
பகுதி 2: ஃபிரான்சைசிக்கு கிடைக்கும் நன்மைகள்
வருமானம் மற்றும் உத்தரவாதம்
• கமிஷன்: ஒவ்வொரு புக்கிங் தொகையிலும் 15% கமிஷன் வழங்கப்படும்.
• உத்தரவாத வருமானம்: ஃபிரான்சைசிக்கு மாதம் ₹15,000 குறைந்தபட்ச வருமானமாகச் சேருவதை நிறுவனம் உறுதி செய்கிறது.
செயல்படும் முறை: 15% கமிஷன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் ₹15,000-க்கு குறைவாக இருந்தால், மீதமுள்ள பற்றாக்குறைத் தொகையை நிறுவனமே 'ஊக்கத்தொகை' என்ற பெயரில் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும்.
உதாரணம்
• ஒரு மாதத்தில் நீங்கள் கமிஷன் மூலம் ₹10,000 மட்டுமே சம்பாதித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ₹15,000-ஐ எட்ட இன்னும் ₹5,000 தேவைப்படுகிறது. அந்த மீதமுள்ள ₹5,000-ஐ நிறுவனம் உங்களுக்கு வழங்கிவிடும்.
செலவுகள் ஏற்பு
• அலுவலக வாடகை மற்றும் மின்சார கட்டணத்தை நிறுவனமே நேரடியாகச் செலுத்தும்.
பேக்கிங் கட்டணம்
• வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் பேக்கிங் கட்டணத்தை ஃபிரான்சைசியே முழுமையாக வைத்துக்கொள்ளலாம் (இதை நிறுவனத்திற்குத் தரத் தேவையில்லை).
பகுதி 3: ஒப்பந்தம் மற்றும் வெளியேறும் கொள்கை
ஒப்பந்த காலம்
• ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 3 வருடங்கள் கட்டாயமாகச் செயல்பட வேண்டும்.
• 3 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் விரும்பினால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
விலகும் முறை
• தொழிலை விட்டு வெளியேற விரும்பினால், 3 மாதங்களுக்கு முன்பே நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
• முன்னறிவிப்பு இல்லாமல் வெளியேறினால் எவ்விதத் தொகையும் திரும்பக் கிடைக்காது.
பணம் திரும்பப் பெறுதல்
• முறையாக நோட்டீஸ் கொடுத்து வெளியேறும் பட்சத்தில்:
o வைப்புத்தொகை: நீங்கள் செலுத்திய ₹20,000 வைப்புத்தொகை முழுமையாகத் திரும்ப வழங்கப்படும்.
o சொத்துக்கள் மீட்பு: நீங்கள் அமைத்த இன்டீரியர், ஃபர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 50% இழப்பீடு வழங்கப்படும்.
குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச பட்ஜெட் ₹85,000 மட்டுமே. எனவே, அதிகபட்ச ரீஃபண்ட் தொகை ₹42,500 வரை மட்டுமே வழங்கப்படும்.
முக்கிய குறிப்புகள்
• பொருட்களைப் பாதுகாப்பாகப் பேக் செய்வது ஃபிரான்சைசியின் முழுப் பொறுப்பு.
• அலுவலகத்தின் நேரங்கள் மற்றும் கட்டணங்களை நிறுவனம் மட்டுமே நிர்ணயிக்கும்.
Nathan Logistics - Booking Office Franchise
Complete Guidelines and Processes
For entrepreneurs interested in partnering with Nathan Logistics to open a Booking Office, the following comprehensive guidelines and processes are outlined to ensure a successful startup and operation.
Part 1: Step-by-Step Franchise Process
To establish a new branch, the following six steps must be meticulously followed:
Step 1: Location Check & Application
• Verify Pincode: Check the list of approved pincodes on our website to ensure your desired location is eligible.
• Application Submission: If your area is listed, fill out and submit the online application form.
Step 2: Screening
• Preliminary Discussion: A company representative will contact you via phone to discuss initial details of your application.
Step 3: Meeting & Deposit
• In-Person Meeting: If the phone discussion is satisfactory, you will be invited for an in-person meeting at our company.
• Security Deposit: Agree to the terms and conditions, and then pay a ₹20,000 security deposit to confirm your booking.
Step 4: Site Selection
• Office Space Requirements: Choose an office space of at least 200 sq. ft., located on the ground floor with parking facilities.
• Location Approval: Our team will inspect and approve your selected location before any work begins.
Step 5: Setup & Interiors
• Franchisee Responsibilities: Complete painting, furniture installation, branding, and electrical work at your expense, following company guidelines.
• Equipment Purchase: Buy necessary computers and devices, staying within a budget of ₹85,000.
Step 6: Training & Launch
• Training: Once setup is complete, the company will provide training on billing software and processes.
• Official Launch: Your branch will be officially launched, ready to serve customers.
Part 2: Benefits for the Franchisee
1. Income and Guarantee
• Commission: Earn a 15% commission on every booking.
• Guaranteed Monthly Income: Ensure a minimum monthly income of ₹15,000. If commissions fall short, the company will cover the difference as an 'Incentive'.
• Example: If you earn ₹10,000 in commissions, the company will pay an additional ₹5,000 to meet the ₹15,000 minimum.
2. Expense Coverage
• Office Expenses: The company covers office rent and electricity bills directly.
3. Packing Charges
• Retain Earnings: Keep the full amount of packing charges collected from customers without sharing with the company.
Part 3: Agreement & Exit Policy
Lock-in Period
• Operational Commitment: The branch must operate for a minimum of 3 years from the agreement date.
• Post-Lock-in Options: After 3 years, you may choose to renew or terminate the agreement.
Exit Process
• Notice Period: Provide a 3-month written notice if you wish to exit the business.
• Refund Conditions: Without prior notice, no refunds will be issued.
• Refund Policy:
o Security Deposit: Receive a full refund of the ₹20,000 security deposit.
o Asset Buyback: Get 50% compensation for interiors, furniture, and electronics, up to a maximum of ₹42,500.
Important Notes
• Packing Responsibility: Safely packing goods is the franchisee's responsibility.
• Determined by Company: Office timings and rates are solely determined by the company.
These guidelines are designed to provide a smooth and profitable franchise experience with Nathan Logistics. By adhering to these steps and policies, franchisees can ensure a successful partnership and business operation.



Ready to Start?
Sulur
Apply Now